Mind 7
புரிதலும் புரிதல் நிமித்தமும்
வணக்கம்!
சென்ற பதிவில் யாரெல்லாம் உளவியல் ஆலோசகர், அதற்கான தகுதிகள் என்ன? என்று சொல்வதாக முடித்திருந்தேன் . அதோடு கூட நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது எப்படியென்றும் இந்த பதிவில் பார்ப்போம்
யார் கவுன்சலிங் கொடுக்கலாம்??
அடிப்படை கல்வி தகுதியும், Active listening என்ற தகுதியும், உதவ வேண்டும் என்ற ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் நல்ல கவுன்சலர் ஆகலாம்.
ஆனால் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டுமென்றால் உளவியல் (Psychology), ஆற்றுப்படுத்துதல் & வழிகாட்டுதல் (Counseling & Guidance) சமூகப்பணி (Social Work) , ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் (Post Graduation) பெற்றிருப்பார் உளவியல் ஆலோசகர் In addition, Doctorate முடித்தவர்களோ Psychiatric Social workerகளோ அல்லது இதற்கென்று certificate courses உள்ளன – அதை முடித்தவர்களோதான் நிஜமாகவே கவுன்சலர்களாக பணியாற்ற முடியும். அடுத்த முறை இது போன்று கவுன்சலிங் கொடுப்பவர்கள் யாரையும் அணுகினால் அவர்களின் கல்வித்தகுதியை தெரிந்துக்கொண்டு அணுகுங்கள்.
எனக்கு தெரிந்த கொஞ்ச கல்வி தகுதிகளை பட்டியலிடுகிறேன்.
1. Psychology, Counselling psychology, Applied Psychology, Counselling and Psychotherapists – Minimum Master Degree + M.Phil/ PH.D is value Added + Training
2. Social work in Psychiatry, clinical counselling – Master Degree + Training
3. PG Diploma Courses and Special Certification Courses – There are 50 +
4. Almost All the Medical Persons specially Psychiatry Doctors (MD/ MBBS, DPM ++)
சரி சகாயா .. படித்தால் மட்டும் ஒருவர் நல்ல கவுன்சலிங் தந்து விட முடியுமா என்ன ?.எவ்வளவு சம்பவம் பாக்குறோம் ஊர்ல ? .. நல்ல கவுன்சலரின் தகுதிதான் என்ன???? என்று கேட்கிற நம்மவர்களுக்கு, சற்று விளக்கமாக பேச விரும்புகிறேன் .
உளவியல் ஆலோசகர் தகுதிகள்
கொஞ்சம் கவனித்துப்பாருங்கள் ,, நமக்கு வருகிற பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமோ காரியமோ நமக்கு பல நேரங்களில் புரிவதில்லை. பழியை- சந்தர்ப்ப சூழ்நிலை மேலும் அதிர்ஷ்டம் அல்லது ராசி சமாச்சாரங்கள் மேலும் போட்டு விட்டு நாம் பாட்டுக்கு நம் வேலையைப் பார்த்து கொண்டிருப்போம் . இல்லையென்றால் நமக்கேதும் பிரச்சினையில்லை என்று நம்மையே ஏமாற்றிக்கொண்டிருப்போம். இதை சுய நியாயப்படுத்துதல் (Self Justification) என்பார்கள் உளவியலில்..
நம்முடைய இந்த சுய நியாயப்படுத்துதலை (Self Justification) தவிர்த்து, நம்முடைய நிஜமான தவறுகளை அடையாளம் கண்டு சொல்வதே நல்ல கவுன்சலர்களின் வேலை. ஆகவே உண்மையிலே நல்ல கவுன்சலர்களை அடையாளம் காண்பது என்பது சிகிச்சையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. மிக முக்கியமான சில விஷயங்கள் கீழே
Qualifications of Good Counselor
1.Active listening – உங்கள் பிரச்சனைகள், உணர்வுகளைக் கூர்ந்து கேட்பவராக இருக்க வேண்டும் . நீங்கள் பேசிக்கொண்டிருக்க அவர் தனது அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க கூடாது.உங்களை முழுமையாக உங்கள் மனதிலிருப்பதை பேச விட வேண்டும். எப்போடா gap கிடைக்கும் என்று காத்திருப்பது போல் இடையே பாயக்கூடாது. உங்களோடு தேவைபட்டால் மட்டுமே இடைபட வேண்டும்.
2. Non Judgmental – முன் முடிவற்றவராக இருக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை முழுமையாக அறியும் முன் நீ இப்படித்தான் இருப்பாய் என்று முடிவுக்கு வருவதோ உங்களை உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீ செய்தது தவறு என்று பழிப்பதோ கூடாது.
உங்கள் பிரச்சனைகளை வைத்து உங்களை தவறாக எடைபோடாமல், உங்களின் மன ஓட்டங்களை அப்படியே உள்வாங்கி எந்தவித பாராபட்சமின்றி, உங்களுக்கு சரியான வழிகாட்டும் நல்ல மனம் உடையவர்தான் உளவியல் ஆலோசகர்.
3. Empathy and understanding uniqueness – ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை உடையவர்கள். ஆகவே ஒவ்வொரு தனிமனிதனின் பிரச்சனைகளும், மற்றவர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை.” என உறுதியாக நம்புபவர்தான் உளவியல் ஆலோசகர். தேவைப்படும் போது சில உளவியல் நுட்பங்களை பயன்படுத்தி உங்களின் தனித்தன்மையை மேம்படுத்தவும், உங்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை நீங்களே தடுத்துக் கொள்ளும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துபவர்தான் உளவியல் ஆலோசகர்.
4. ஒரு நல்ல கவுன்சலர் கண்டிப்பாக உங்களிடம் ஆலோசனையை தவிர மற்றவற்றை தர மாட்டார். என் புத்தகம் வாங்கு என் DVD வாங்கு உன் பிரச்சனை சரி ஆகிடும் என்று சொல்பவரை கண்டால் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்…..
5. உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும். உங்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். நீ எப்படி என்கிட்டே கேள்வி கேக்கலாம் என்று கோபப்பட கூடாது. நான் சொல்றததான் நீங்க கேக்கணும்நு உங்களை உங்களை ஏமற்றக் கூடாது
6. உங்களைப்பற்றிய விவரங்களை உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள கூடாது. உங்களுடன் உங்கள் பிரச்சனைத் தவிர தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்பவராக இருக்க கூடாது – தேவையில்லாமல் !
7. நீங்கள் Second Opinion வாங்க விரும்பினால் கண்டிப்பாக மறுக்க கூடாது.அவசியம் நேரிட்டால் உங்களை மன நல சிகிச்சைக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஒரு நல்ல மருத்துவரை அறிமுகம் செய்ய வேண்டும் As early as possible… மருந்து சாப்பிட்டால் நீ ஒழிஞ்ச!!!… என்று சொல்லி சரியான சிகிச்சை கிடைக்க தாமதிக்க கூடாது.
இவை எல்லாம் ஒரு நல்ல கவுன்சலரிடம் நீங்கள் எதிர்ப்பார்க்க கூடிய அடிப்படை விஷயங்கள். சரி நல்ல கவுன்சலர் கிடைத்து விட்டார் என்றால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடுமா… என்றால் அது பிரச்சினையை பொறுத்து. அப்படியென்றால் எந்தெந்தப் பிரச்சினைக்கு கவுன்சலிங் தரலாம்.. அடுத்தப் பதிவில்.. !
-சகாயா

