உள்ளும் புறமும் - 2
புரிதலும் புரிதல் நிமித்தமும் 2
"ஐயோ ! ஸாரிங்க,, தெரியாம பண்ணிட்டேன்!!"
"நான் ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல ?"
"எனக்கு என்னமோ ஆயிடுச்சு .."
"அவர் ரொம்ப தங்கமானவர் தான்.. ஆனா கோவம் வந்தா என்னப் பண்றோம்னு அவருக்கே தெரியாது .. அப்படிதான் போன வாரம் . #@%$#,,,"
"ஐயோ அவர் அப்படிப்பட்ட ஆளு இல்லிங்க!! என்ன ஆச்சுனே தெரில திடிர்னு பைத்தியம் புடிச்ச மாறி நடந்துகிட்டார் ?"
இந்த மாதிரி வரிகளை உங்கள் காதுகள் தினம் தினம் கேட்டு இருந்திருக்கும்
அட ஏங்க.. எத்தனையோ சமயங்களில் நாமே ஒரு மாதிரி நடந்துக்கொண்டு " அடடா இப்படி பண்ணிட்டோமே ! நாம ஏன் இப்படி நடந்துகிட்டோம்நு ?? !! "ஆச்சரியப்பட்டிருப்போம் ..
“மனிதன் ஒரு தர்க்க சக்தியுள்ள பிராணி” என்று உலகமே நம்பியிருந்தற்கு மாற்றாக வேறொன்றை ஒரு நல்ல நாளில் விவரமாக விளக்கினார் ஒரு வயதான வாலிபர். நம்மவர் ஸிக்மண்ட் ஃப்ராயட் என்ற உளவியலாளர். அப்படி என்னதான் சொல்லியிருப்பார் இந்த மனிதர் ?
மருத்துவ படிப்பை படித்துவிட்டு மனநோயாளிகளுக்கு சிகிட்சை பார்த்து கொண்டிருந்த ப்ரோய்ட்க்கு ஒருவர் மனநோயாளி ஆவது பற்றி ஏன்? எதற்கு? எப்படி என்பது போன்ற கேள்விகள் வந்தது. ஆரம்பித்தார் ஆரய்ச்சியை.
அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் ஒரு மிக முக்கியமான முடிவுக்கு வந்தார் — நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நடந்த சில முக்கியமானசம்பவங்கள் நமக்கு வயது வந்த பின் நமக்குத் தெரியாமலேயே நம்மை இயக்குகின்றன. சிறு வயதில் நடக்கும் சமபவங்களை நாம் மறந்துவிட்டோம் என்றுநாம் நினைத்தால்கூட நமக்கு தெரியாமல் அவை நமது ஆழ்மனதில் பதிந்திருந்து நம் சிந்தனைகளை இயக்குகின்றன.இத்யாதி இத்யாதி விசயங்கள் ..
சுருங்க சொல்லுவோமானால்,
நம் எல்லோருக்கும் மனதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
1. வெளிமனம்- நினைவு மனம் - புறமனம். (Conscious Mind)
2. உள்மனம் - ஆழ் மனம், சப் கான்ஷியஸ் மைண்ட். (unconscious Mind )
சரி விஷயதுக்கு வருவோம். மனிதனிடம் உள்மனம் வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது என கூறினேன். எதுக்கு இரண்டு மனம் ஒன்று பத்தாதா? என நீங்கள் நினைக்கலாம்.. எதற்குமே காரணம் இல்லாமல் இல்லை இரண்டிற்குமே தனி தனி வேலைகள் இருக்கின்றது.
இந்த வெளிமனம், வெளியுலகோடு நாம் செம்மையான முறையில் தொடர்பு கொள்ளவும் அன்றாட வாழ்வை நாம் தொந்தரவில்லாமல் வாழவும் செயல்படுகிறது. நாம் பார்க்கிற கேட்கிற சாப்பிடுகிற மசாலாக்களை கட்டுப்படுத்துவது வெளி மனம். எங்கே எதை எப்படி பேச பழக செய்ய வேண்டும் என்பதிலிருந்து எல்லா விஷயங்களையும் பொறுப்பாக பார்த்து கொள்கிற நல்லவர் இவர். பயம் வெண்டாம் ..
நம் அன்றாட வாழ்கையில் நடைபெறுகின்ற செயல்களை சேமித்து வைக்கின்றது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து வைத்திருக்காது.தனக்கு தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில் மறந்து விடும். தர்க்கவியலானது ,பகுப்பாய்வு செய்யும் ,பகுத்தறியும்(logical ,analyze,rational) தன்மை கொண்டது. வெளிமனம் என்று ஒன்று இருப்பதால் தான் நாம் நமது வாழ்கையில் நடந்த துக்கமான நிகழ்வுகளையும் ,அவமானங்களயும் மறந்து சகஜமாக வாழமுடிகின்றது.. என்ன சொல்கிறீர்கள்?.
உள்மனம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக்கணம் வரை நம் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களின் பதிவுகளையும் அடக்கியது. ( இது எப்படி சாத்தியம் ?.. நினைவுகள் பற்றிய பதிவில் பார்க்கலாம் ) உள்மனதின் சக்தி அபாரமானது. உதாரணமாக கடலில் மிதக்கும் பனிப்பாறை சிறிது மட்டும் வெளியே தெரியும். அது வெளிமனம். ஒரு மலையளவு பனிப்பாறை கடலுக்குள் மூழ்கியே இருக்கும் அது உள்மனம். இதை ஐஸ் பெர்க் அனாலஜி என்பார் ஃப்ராய்ட்.
உள்மனம் தூங்குவதில்லை. வெளிமனம் கண்மூடித் தூங்கும்போதும் உள்மனம் விழித்திருந்து வேலையை செய்கிறது . தூக்கத்திலும் கூடி மௌனமாக இயங்கி நம்மைக் காப்பதும் இதுவே.
உடலுறுப்புகள் முக்கியமாக உள்ளுறுப்புகள் வெளிமனதின் அறிவுக்கு அப்பாற்பட்டுத்தான் இயங்குகின்றன. இதயம் துடிப்பதும், மூச்சு விடுவதும் குடலும் வயிறும் சிறுநீரகமும் இயங்குவதும் அறிவுக்குக் கட்டுப்படா? வெளிமனம் உறங்கும்பொழுதும் இவை தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. உள்மனமே பயத்திலே மார்பைப் படபடக்க வைக்கிறது. உள்ளங்கைகளில் வேர்வையை ஆறாய்ப் பெருக்குகிறது. தொண்டை அடைக்கிறது.
புகைத்தல்,மது , இனிப்புப்பண்டம் சாப்பிடுதல் , அடிக்கடி சாப்பிடுதல் ,நிகம்கடித்தல் போன்றவை ஆள்மனதில் பதிந்து இருக்கும் உள்மனமே நினைவுகளின் கருவூலம். நாம் பிறந்தது முதல் இன்று வரை நாம் அடைந்த அனுபவங்கள், அனுபவித்த அதிர்ச்சிகள், சோகங்கள், பயங்கள், சந்தோஷங்கள் எல்லாமே இந்த உள்மனம் என்னும் வங்கியில் இருக்கின்றன
ஒருவர் கண்ணாடி போட்டிருந்தாலும் அவரது கண்ணிற்கு கிட்ட கையைக் கொண்டு சென்றால் கண்ணை உனனே மூடுவார் ,ஒரு பெண் முழுக்காற்சட்டை ஆணிந்து சென்றாலும் காற்று வீசும் போது கையால் கீழ் உடுப்பை அழுத்துவார் , நெருப்புச் சுடும் பொழுது கையை எடுத்தல் ,பனியில் சறுக்கும் பொழுது கையை பின்னே ஊன்றுதல் போன்றன இந்த உள்மனது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு (Free from logical ,analyze, rational thinking) செயல்படுவதை விளக்கும்.
நம் உள்மனதில் இருந்து கொண்டே நம் சிந்தனைகளைப் பாதிக்கும் நமது குழந்தை பருவ ஞாபகங்களை தெரிந்துகொள்ள ஒரு வழிமுறையை ஃப்ராயட்கண்டுபிடித்தார். அந்த வழிமுறைதான் உளப்பகுப்பாய்வு (Mental Analysis ).
ஃப்ராயட் கொடுத்த கருத்துக்களும் மனநோயாளிகளை குணமாக்கும் வழிமுறைகளும் உளவியல் பற்றிய எண்ணங்களை பெரிதும் பாதித்தன. மனிதனைஇயக்கும் உள்மனம் அவர் கட்டுப்பாட்டுக்கு அடங்காதது என்ற எண்ணம் மனிதனின் தன்னைப் பற்றிய கருத்தை மாற்ற செய்தது. “மனிதன் அறிவு மிகுந்தபிராணி.”
ஆழ்மனதினைப் பற்றிய ஒரு அறிமுகப்படுத்துதே இப்பதிவின் நோக்கம் .. அதனால் இதோடு நிறுத்திக் கொள்வோம்.
New Intro for the Post
அதிசய எண் 21: ஒரு செயல் பழக்கமாக எத்தனை நாள்கள் தேவை? 21 என்கின்றனர் உளவியல் அறிஞர்கள். தொடர்ந்துஒரு செyal 21 நாட்கள் செய்யப்படுகிறபோது அது பழக்கமாகிறதாம். உதாரணமாக "அதிகாலை எழுதல்" என்பதைக் கொண்டால். அதை 21 நாட்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்(கடிகாரத்தின் அல்லது கட்டிய/கட்டப்போகிறவர்கள் உதவியோடு). 21 நாட்கள் நீங்கள் தொடர்ந்து செய்து விட்டால் 22 ஆம் நாள் நீங்கள் தானாகவே அதிகாலையில் கடிகார அழைப்பு இன்றி எழுந்து விடுவீர்கள். கடிகாரமே உங்களிடம் கேட்டுக் கொண்டுதான் மணி எழுப்பும்..
சரி சரி ..வழக்கம்போல இதுவும் ஹோம் வொர்க்தான்.. Enjoy ..:) ( Introduced by William James, Psychology Professor Harvard University)
–சகாயா