கவனி!கவனி!!
ஐக்யூவை ஒரு மனிதன் அணுகி “ உங்களது பெரிதான ஞானத்திலிருந்து சில வார்த்தைகளை எழுதித் தர முடியுமா?” எனக் கேட்டார்.
ஐக்யூ தனது எழுதுகோலை எடுத்து “ கவனி” என எழுதினார்.
“இவ்வளவுதானா?” இது வந்தவர்.
ஐக்யூ திரும்பவும் “கவனி, கவனி” எழுதினார்.
“நல்லது” என சொல்லியபடியே “இதிலே ஒன்றும் ஞானத்தின் ஆழம் இருப்பதாக படவில்லை குருவே” என இழுத்தார் நம்மவர்.
இப்போது ஐக்யூ திரும்பவும் மும்முறை எழுதினார். “கவனி, கவனி, கவனி”.
இப்போது அந்த மனிதன் கோபம்மேலிட்டவனாய் “அப்படி அந்த கவனி என்ற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம் ? “ என கத்தினார்.
“ ‘கவனி’ என்றால் ‘கவனி’ எனப் பொருள்” என்றார் ஐக்யூ.
- Source The Little Zen Companion
இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்?
கடும் மழை நாளிலே, ஐக்யூ சங்கூ என்ற இரண்டு சென் குருக்கள் ஒரு சேறும் சகதியுமான சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். சாலை முழங்கால் மட்டம் சேறால் நிரம்பியிருந்தது. பட்டாடை உடுத்தியிருந்த ஒரு பெண் சாலையைக் கடக்க முடியாதவளாய் நின்றிருந்தாள். ஐக்யூ “வா பெண்ணே” என அழைத்து அவளை தோளில் சாய்வித்தவராய் சாலையைக் கடக்கும் மட்டும் கொண்டு விட்டார். சங்கூ எதுவும் பேசவில்லை. அமைதியாக வந்தவர் இரவு தங்கும் விடுதியை அடைந்த உடன் ஐக்யூவிடம் “ அது எப்படி ஒரு சென் குரு அதுவும் வயதில் குறைந்தவர் ஒரு வாலிப பெண்ணை தொட்டு தூக்கலாம்? “ என வினவினார்.
ஐக்யூ பதிலுக்கு “நான் அவளை அங்கேயே இறக்கி விட்டுவிட்டேன. ஆனால் நீங்கள் இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்? “

No comments:
Post a Comment