பேசுவதற்கு எத்தனையோ
இருந்தும்
எப்போதுமே என்பேச்சு
உன்னைச் சுற்றியே.
அணைப்பதற்கு அன்புக்கூட்டம்
இருந்தும்
ஆசைப்படுவது உன்
அணைப்பிற்கே.
தொட்டுவருகிற எல்லாவற்றையும்
தட்டிவிட்டு உன்னிடம்
வருவது எதற்கு?
நட்பைத் தாண்டின
ஒன்றுக்கு.
நல்ல பெயர் ஒன்று
வை அந்த உறவுக்கு.
No comments:
Post a Comment