கற்களைத் தேடியெடுத்து, கல்லதன் தன்மையறிந்து
கையிலே உளிபிடித்து, கவின்மிகு நற்சிலை
வடித்து ,
கற்சிலைகளைக் கையெடுத்துக் கும்பிட வைத்தார்கள்- சிற்பிகள்
அன்று.
தேடலோடு தேடி வந்த
கற்களுக்கு, ஓடி வந்து உதவாமல்
கையிலே உளிகொடுத்து, தன்னைத்
தானே செதுக்க விட்டு,
ஒதுங்கி ஓரமாய் கைகட்டி
நிற்கிறார்கள் – இன்று.
முயற்சித்து முடியாமற்போன கல்லும்,
முறிந்து போன கைகாலும்
என
முழுக்க வீணாய்ப் போன
கற்கள்
திரும்பின பக்கமெல்லாம் திகைக்க வைக்கின்றன.
சிற்பிகளே! சிற்பிகளே !!
உங்களால் சிற்பிகளாகி செதுக்க முடியாவிட்டாலும்,
கற்கள் தன்னைத்தானே பார்த்து
செதுக்கிக் கொள்ள
‘கண்ணாடி’யாகவாவது இருங்களேன்…!!!
நன்றி :
கரு- சகோ.ராஜன்
சிலை உதவி- கூகுளும்
அதன் நண்பர் கமலக்கண்ணனும்.

No comments:
Post a Comment