Thursday, 18 September 2014

ஹிட்லர் - பா.ராகவன்

ஹிட்லர் - பா.ராகவன்

முன் மாதிரித் தலைவர்களைப்( Role Model )பற்றிப் பேசும்போது என் நண்பர்கள் அடிக்கடி சொல்கிற ஒரு வாக்கியம். "எனக்கு காந்தியைப் பிடிக்காது.. ஹிட்லர் தான் என்னைக் கவர்ந்தவர் " என்பது.ஹிட்லர் என்கிற மனிதன் இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்ச தலைவனாகவேத் தெரிகிறார்..

ஆமாம்.சும்மாவாப் பின்னே ..

 ஒரு சாதாரண சிறுவன் சர்வாதியாகிற விஷயம் நிச்சயம் அலாதியானதே!!இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும்.. இது ஒரு பொதுவான மனோ நிலை. இளைஞர்களுக்கு இயல்பாகவே சாகசம் மற்றும் குறுகிய  கால வளர்ச்சியில் ஒரு ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். ஹிட்லர் சம காலத்துக்கு சற்று முந்திய ஒரு உதாரணம் அவ்வளவே ..

சரி விசயத்துக்கு வருவோம் ..

எனக்கும் ஹிட்லரின் மீது ஒரு கிளர்ச்சி இருக்கத்தான் செய்தது. அவரைக்குறித்து அதிகம் வாசித்திருக்கிறேன். அந்தவகையில் ரொம்ப நாள் ஆசைப் பட்டு இப்போது தான் கிடைத்த ஒரு புத்தகம்

" ஹிட்லர் - பா.ராகவன்"

வியன்னாவின்  தெருக்களில்  ஓவியம் வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் ஐரோப்பாவின் வரைபடத்தை மாற்றி வரைவார் என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கவில்லை ..ஒரு தனிமனிதனின் பேச்சுத் திறமையால் தகவல் தொடர்பு பணியிலிருந்து மகாப் பெரிய ஜெர்மன் தேசத்துக்கு தலைவராக முடியும் எனத் நிருபித்துக் காட்டியவர் ஹிட்லர் ..
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது..
நல்ல ஓவியர்.. திறமையான பொறியாளர் (volkswagen டிசைன்), அருமையான பேச்சாளர்.. தலைவர், பிறவி சர்வாதிகாரி, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி அடக்கி வைக்கும் திறமை அவருக்கு வாய்த்திருந்தது . இதெல்லாம் இருந்தாலே போதாது …அவர் திறமையான அரிசயல்வாதிதானே ?
ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. “கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!” என்று தனது குட்டி மீசைக்கு கீழிருந்த வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்த்தார் ஹிட்லர் .. சரியாய் அன்றையிலிருந்து அழிவுகள் ஆரம்பித்தன ...
தனது சிறு வயதில் தான் பார்த்த யூத/கம்யூனிச  ஆக்கிரமிப்பின் காரணமாக தன் பன்னிரண்டு வரு ஆட்சியில் பதினோரு மில்லியன் மக்களை கொன்று கின்னஸ் சாதனைப் படைத்தவர்.. அதிலும் குறிப்பாக யூத மக்களில் ஆறு மில்லியன் மக்க்களைக் கொன்று குவித்தவர்.. அவரது நாஜிப்படைகளின் concentration Camp ( விஷ வாயு முகாம்கள்) பற்றி படித்தவர்கள் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது .. கொடூரத்திலும் கொடுரம் ...

1035 பக்கங்கள் கொண்ட ‘அடால்ப் ஹிட்லர்’ என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், “ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை “ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!” என்று கூறுகிறார்
ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன்… செய்த சாதனை என்ன தெரியுமா?.  ‘ஜெர்மனி’ என்ற ஓர் நாட்டையே ‘சாடிஸ்ட் நாடு’ ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை.

ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர  உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்தது, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .. இவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்ற பட்டிமன்றம் முடிவதற்குள்   இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு எட்டியிருந்தது. ஒரு நல்ல நாளிலே "காதலியுடன் ஹிட்லர் தற்கொலை" என்ற செய்தி வெளியிட்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்..
உலகம் பெருமூச்சு விட்டது..

அதற்குப் பின் உலகமே ஜெர்மனியைப் பங்கு போட்டு பெர்லின் சுவர் எழுப்பி ஜெர்மனியை உண்டு இல்லாமல் பண்ணியது வேறு கதை .

இப்படி பக்கத்துக்கு பக்கம் திருப்பங்கள் வாய்ந்த ஹிட்லரின் வாழ்க்கையை நிஜத்துக்கு சற்றும் குறையாத விஹ்ததில் பதிவு செய்திருக்கிறார் பா. ராகவன் . எள்ளல் நடை.. மழி ஆளுமை நிச்சயம் சரித்திர புத்தகம் என்கிற நினைப்பை தராது..

வாசிக்க முடிந்தால் வாசித்துதான் பாருங்களேன்!








Tuesday, 9 September 2014

மனமது செம்மையாயின் .... – 1


(புரிதலும் புரிதல் நிமித்தமும் 1 )
"என்னன்னே தெரியலங்க! மனசு ரொம்ப பாரமா இருக்கு .. ஒரு பத்து நாள் லீவப் போட்டுட்டு எங்கேயாவது போயிடலாம்நு இருக்கு.. "  இந்த வரிகள் நாம் அடிக்கடி கேட்கிறவை. ஏன்உங்களுக்கும் கூட சில பல நேரங்களில் தோன்றியிருக்கும் இல்லையா ?
எஸ்
நோ
மேபி ..

இதை Depression என்றோ மனக்குழப்பம் என்றோ... சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் premenstrual syndrome  என்றோ  முடிவுக்கு வருவதற்கு பல பதிவுகள் நான் போட வேண்டியிருக்கும் .அதை வருங்கால Action Item ஆக வைத்துக் கொள்ளலாம்.





மனம் என்கிற விஷயத்தை கூகுளில் தேடினால் போதும் நம்மைப் போலவே அதுவும் "ஆன்மா" "குண்டலனி" என ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயமாக நினைத்துக்கொண்டு தேடல் முடிவுகளைத் தருகிறது . உங்களையும் என்னையும் போலவே 'மனம்' மனது' 'mind ' என்கிற விசயத்தில் கூகுளும் குழம்பி போனதில் குறையொன்றும் இல்லை .

காலையில் கண்விழிக்கும்போதே நேற்று நம்மை திட்டிய மேலாளரை நினைத்துக் கொண்டே எழுந்திருக்கிறோம். பல் விளக்கும்போது எப்படி இருந்தாலும் அவர் எப்படி நம்மை அப்படி சொல்லலாம் ? அவர் மட்டும் சரியா செஞ்சாரா? என்றக் கருத்தை ஏற்று கொண்டு கழுவி ஊற்றுகிறோம் வாஷ் பேசினில். குளிர்ந்த தண்ணிர் முகத்தில் பட்டு முதுகில் வழிகிற குளிர்ந்த  தருணத்தில் இன்னைக்கு திருப்பி கேட்டிடனும் என்று உணர்ச்சி வசப்பட்டு துடைக்கிறோம்  நம்மை .. தோசையை பிட்டு வாயிலே வைக்கிற போது நமக்குள்ளேயே மசாலா சேர்த்து அந்த நிகழ்வைக் கற்பனை செய்கிறோம். டிராபிக்கில் நிற்கிறப் போது நாம் செய்வது சரி என்று நமக்கு நாமே நியாயம் சொல்லிக் கொள்கிறோம்

ஆக மொத்தம் நேத்து திட்டனதுக்கு நியாயம் கேட்கிற இந்த மகா பெரிய ஒரு காரியத்துக்கு  மனது என்கிற சமாச்சாரம் பல வழிகளில் செயல்பட வேண்டியிருக்கிறது

சரி நாம் ஒரு முடிவுக்கு வருவோம்  மனம் என்பது நமது சிந்தனை, கருத்து,  உணர்ச்சி, கற்பனை, நியாயம் போன்ற அறிவு(Intellect ) மற்றும் உணர்வு சார்ந்த விஷயங்களின் தொகுப்பாகிறது.
மனிதனின் செயல்களை எப்படி புரிந்து கொள்ள முடிவதில்லையோ அப்படியே மனதையும் புரிந்துக்கொள்ள முடிவதில்லை
நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலங்களில் மனம் இறையியலை சார்ந்து ஆன்மா முக்தி என முத்திரையிடப்பட்டு இருந்தது. நம் காலத்திலோ 'மூளை'பற்றின புரிதலின் அடிப்படை எனவும் கான்சியச்னஸ் என்பதற்கு ஈடாகவும் பயன்படுத்தப் படுகிறது என்றாலும் இரண்டுமே தவறு என்பது மட்டும் 110% சரி !!!
நிற்க, இதுவரை படித்ததிலே மனம் என்பது முக்கியமானது என்றும் அதன் நலம் அத்தியாவசியமானது என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்

ஒரு ஐந்து பத்துக் கேள்விகள் கேட்டு உங்களை ஆம் இல்லையென சொல்ல வைக்காவிட்டால் அது மனவியல் சார்ந்த கட்டுரை இல்லை என்ற போது வழக்கத்துக்காக ஒரு 5 கேள்விகள்
1. இன்றைக்கு என்ன தேதி, என்ன கிழமை என்பதை மறந்து விடுகிறீர்களா ?
2. நீங்கள் குளிப்பதற்கு சமீபமாக அதிக நேரம் எடுத்து கொள்கிறிர்களா?
3.பர்சில் பணம் வைத்தோமா இல்லையா என திரும்ப திரும்ப யோசிக்கிறிர்களா?
4.உங்கள் டீமில் எல்லாரும் நீங்கள் இல்லாத போது உங்களை பற்றி பேசிக்கொள்வது போலத் தெரிகிறதா ?
5.மிக வேகமாக ஒரு வேலையை செய்து முடித்து விட்டு சின்ன சின்ன தவறுகளுக்காக திட்டு வாங்கி இருக்கிறிர்களா ?
இதற்கு ஆமென்றோ இல்லை இலயென்றொ பதில் சொல்லி இருக்கலாம் தவறு ஒன்றுமில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் வயது, சூழ்நிலை, மறதி மற்றும் கவனமின்மையின் வெளிப்பாடுகளே.. இது மனதின் ஒரு சில செயல்பாடுகளின் தோல்வியே.
இதையும் தாண்டின சில அடிப்படைஉலவியல் சார்ந்த விஷயங்கள் உண்டு. நாம் தினமும் உச்சரிக்கிற வார்த்தைகள். அவைகளைக் குறித்த காரியங்களை வருகிற தொடர் பதிவுகளில் பார்க்கலாம்

Message for the Post
நம் உடலில் சர்கடியன் கடிகாரம்( Circadian clock ) ஒன்று உண்டு.. வெளிப்புற பகல் இரவு மாற்றத்திற்கு ஏற்ப  மனித உடலின் உயிரி-வேதியல் மாற்றத்தை ஒருங்கிணைக்கிற ஒரு சமாச்சாரம் அது.. உயிரியல் கடிகாரம் என்று வைத்து கொள்ளுங்களேன்...  மனித உடல் இதற்கேற்ப தன்னை அமைத்து கொள்கிறது. நீங்களே யோசித்து பாருங்கள்! .. சரியா 8 மணிக்கு பசிக்க ஆரம்பிக்கும். சிலபேருக்கு சரியா 1 மணிக்கு தூக்கம் வரும் ( மதியமா இரவா உங்கள் சாய்ஸ் ). இதெல்லாம் சர்கடியன் கடிகாரம் பண்ணுகிற வேலை. 

கூகுளில் இன்னும் துருவிப் போனிர்கள்  என்றால், பக்கம் பக்கமாக வாசிக்க கிடைக்கும். ஹோமே வொர்க் இது