ஹிட்லர் - பா.ராகவன்
முன் மாதிரித் தலைவர்களைப்( Role Model )பற்றிப் பேசும்போது என்
நண்பர்கள் அடிக்கடி சொல்கிற ஒரு வாக்கியம். "எனக்கு காந்தியைப் பிடிக்காது.. ஹிட்லர்
தான் என்னைக் கவர்ந்தவர் " என்பது.ஹிட்லர் என்கிற மனிதன் இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்ச தலைவனாகவேத்
தெரிகிறார்..
ஆமாம்.சும்மாவாப் பின்னே ..
ஒரு சாதாரண சிறுவன் சர்வாதியாகிற
விஷயம் நிச்சயம் அலாதியானதே!!இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின்
மீது ஒரு கவர்ச்சி இருக்கும்.. இது ஒரு பொதுவான மனோ நிலை. இளைஞர்களுக்கு இயல்பாகவே
சாகசம் மற்றும் குறுகிய கால வளர்ச்சியில் ஒரு
ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கும். ஹிட்லர் சம காலத்துக்கு சற்று முந்திய ஒரு உதாரணம்
அவ்வளவே ..
சரி விசயத்துக்கு வருவோம் ..
எனக்கும் ஹிட்லரின் மீது ஒரு கிளர்ச்சி இருக்கத்தான் செய்தது. அவரைக்குறித்து
அதிகம் வாசித்திருக்கிறேன். அந்தவகையில் ரொம்ப நாள் ஆசைப் பட்டு இப்போது தான் கிடைத்த
ஒரு புத்தகம்
" ஹிட்லர் - பா.ராகவன்"
வியன்னாவின் தெருக்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில்
ஐரோப்பாவின் வரைபடத்தை மாற்றி வரைவார் என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கவில்லை ..ஒரு
தனிமனிதனின் பேச்சுத் திறமையால் தகவல் தொடர்பு பணியிலிருந்து மகாப் பெரிய ஜெர்மன் தேசத்துக்கு
தலைவராக முடியும் எனத் நிருபித்துக் காட்டியவர் ஹிட்லர் ..
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான்
ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம்
உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம்
நடுங்கியது..
நல்ல ஓவியர்.. திறமையான பொறியாளர் (volkswagen டிசைன்), அருமையான
பேச்சாளர்.. தலைவர், பிறவி சர்வாதிகாரி, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி அடக்கி
வைக்கும் திறமை அவருக்கு வாய்த்திருந்தது . இதெல்லாம் இருந்தாலே போதாது …அவர் திறமையான
அரிசயல்வாதிதானே ?
ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. “கம்யூனிஸ்ட்களும்
யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல்
விடமாட்டேன்!” என்று தனது குட்டி மீசைக்கு கீழிருந்த வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்த்தார்
ஹிட்லர் .. சரியாய் அன்றையிலிருந்து அழிவுகள் ஆரம்பித்தன ...
தனது சிறு வயதில் தான் பார்த்த யூத/கம்யூனிச ஆக்கிரமிப்பின் காரணமாக தன் பன்னிரண்டு வரு ஆட்சியில்
பதினோரு மில்லியன் மக்களை கொன்று கின்னஸ் சாதனைப் படைத்தவர்.. அதிலும் குறிப்பாக யூத
மக்களில் ஆறு மில்லியன் மக்க்களைக் கொன்று குவித்தவர்.. அவரது நாஜிப்படைகளின்
concentration Camp ( விஷ வாயு முகாம்கள்) பற்றி படித்தவர்கள் கண்ணீர் விடாமல் இருக்க
முடியாது .. கொடூரத்திலும் கொடுரம் ...
1035 பக்கங்கள் கொண்ட ‘அடால்ப் ஹிட்லர்’ என்ற புத்தகத்தை எழுதிய
பேராசிரியர் ஜான் டோலேன்ட், “ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால்
இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை “ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன்
என்று பாராட்டியிருக்கும்!” என்று கூறுகிறார்
ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான்.
ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன்… செய்த சாதனை என்ன தெரியுமா?. ‘ஜெர்மனி’ என்ற ஓர் நாட்டையே ‘சாடிஸ்ட் நாடு’ ஆக
மாற்றினான் என்றால் அது மிகையில்லை.
ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத்
தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது.
பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும்,
ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. இரக்கமும், மனிதமும்
துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்தது, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக
நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும்
பீடித்து இருந்தது..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .. இவர் நல்லவரா இல்லை கெட்டவரா
என்ற பட்டிமன்றம் முடிவதற்குள் இரண்டாம் உலகப்
போர் முடிவுக்கு எட்டியிருந்தது. ஒரு நல்ல நாளிலே "காதலியுடன் ஹிட்லர் தற்கொலை"
என்ற செய்தி வெளியிட்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்..
உலகம் பெருமூச்சு விட்டது..
அதற்குப் பின் உலகமே ஜெர்மனியைப் பங்கு போட்டு பெர்லின் சுவர் எழுப்பி
ஜெர்மனியை உண்டு இல்லாமல் பண்ணியது வேறு கதை .
இப்படி பக்கத்துக்கு பக்கம் திருப்பங்கள் வாய்ந்த ஹிட்லரின் வாழ்க்கையை
நிஜத்துக்கு சற்றும் குறையாத விஹ்ததில் பதிவு செய்திருக்கிறார் பா. ராகவன் . எள்ளல்
நடை.. மழி ஆளுமை நிச்சயம் சரித்திர புத்தகம் என்கிற நினைப்பை தராது..
வாசிக்க முடிந்தால் வாசித்துதான் பாருங்களேன்!

No comments:
Post a Comment