புரிதலும் புரிதல் நிமித்தமும்
வணக்கம்!
அகராதியில் மனநல சிகிச்சை என்பதற்கு கவுன்சலிங் என்று எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. “கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கார் … கொஞ்சம் கவுன்சலிங் கொடுப்பீங்கன்னு கூட்டிட்டு வந்தோம்” என்று சொல்பவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் இருப்பார்கள்.
கவுன்சலிங் என்றால் என்னவென்று படித்தவர்களுக்கே சரியான தெளிவில்லாமல் இருப்பதால் தான் கவுன்சலிங் கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை ஏமாற்றி காசுப்பிடுங்கும் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. இதன் தொடர்ச்சிதான் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துவோரும் அதில் பங்கேற்கும் பல நல்ல மனிதரும் மனோ நலத் துறையைக் குறைகூருவது .. சரிப் போகட்டும் ..
இந்த பதிவில் கவுன்சலிங் என்ற சிகிச்சை முறை பற்றி சற்றே விரிவாக முடிந்தளவுக்கு எளிதாக பார்ப்போம் .
மன நோய்களுக்கு சிகிச்சை என்பதே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானதுதான். அதற்கு முன் மாட்டு மந்தைகளை போல மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் மற்றும் வீட்டுக்குள்ளே பூட்டிய அறைக்குள்ளே அடைத்து வைக்கவும், தெருவிலே துரத்தி அலைய விட்டு அப்படியே இறக்க வைக்கவும் மட்டுமே முடிந்திருந்தது.
பல ஆயிரம் ஆண்டுகளாக உடல் பிரச்சினைகளுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர்கள் எல்லா மன குறைபாடுகளையும் மனவியாதி என்கிற ஒரு போர்வை போர்த்தி சுருட்டி கட்டியே வைத்திருந்தார்கள்
அந்த சூழ்நிலையில்தான் சிக்மண்ட் பிராய்ட் தோன்றினார். அது வரை புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்த மனதின் இயக்கத்தை புரிந்துக்கொள்ளவும் அதற்கு விஞ்ஞான சாத்தியமுள்ள பல விளக்கங்களை தந்ததால் உலகமே மூக்கின் மேல் விரல் வைத்து, அண்ணாந்து பார்த்தது.. பலர் அவரை பின்பற்றத்தொடங்கினார்கள். 1930கள் வாக்கில் அவர் புகழ் உச்சத்தில் இருந்தது. கிட்டத்தட்ட மன நல மருத்துவ உலகின் MGR ஆகவே மாறிப் போனார் . ஆனால், ஃப்ராய்ட் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பலக் கருத்துகளைத் தூவிக் கொண்டே போனார். பலதை அவராலேயே நிருபிக்க முடியவில்லை . அதற்கான தேவையும் இருக்க வில்லை ..

பலர் படித்துவிட்டு நேரம் போகாமலோ , தூக்கம் வராமலோ, இவைகளைக்குறித்து ஆராய ஆரம்பித்தார்கள்.. அப்போதுதான் அவரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது. காரணம் ப்ராய்ட் எக்குத்தப்பாக ஏகப்பட்டதை சொல்லிவைத்தார்.. மனிதனின் முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது செக்ஸ் மட்டுமே, மனிதர்கள் இயல்பாகவே அழிவு உணர்ச்சிகளை மட்டுமே கொண்டவர்கள், எல்லா மனித்ர்களுமே இருபால் தன்மையினர், இத்யாதி இத்யாதி விஷயங்கள்…
இந்த ப்ராய்டின் கருத்துகளை பல விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. இது மனித மனதை அதன் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை குறுகிய பார்வையுடன் ஆராய்வது என்று கருதினார்கள். கொஞ்சப் பேர் கொந்தளிதுக் கோவித்துக் கொண்டு தனிகுடித்தனம் போய், ப்ராய்டின் சிகிச்சை முறைக்கு மாற்றாக புது வழி முறைகளை உருவாக்க தொடங்கினர். அப்படி பிறந்ததுதான் கவுன்சலிங் என்ற இந்த வழிமுறையும் ஒன்று.

இதன் குறிக்கோள் என்ன?
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்கையை நல்ல திசையில் கொண்டு செல்லவே எண்ணுகிறான்.ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தவறான முடிவெடுக்கிறான். அந்த தவறுகளின் விளைவாக பிரச்சனைகள் தோன்றும்போது அவனுக்கு அவன் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் ஒரு துணை தேவைப்படுகிறது. துணையின் (கவுன்சிலர்) வேலை அவனுக்கு அவன் எடுக்கும் முடிவுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை எடுக்க தூண்டிய காரணிகளை ஆராய்ந்து தெளிவான முடிவெடுக்க உதவுவதுதான்.
கவுன்சலிங் என்பது என்ன?
உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் (TALK THERAPY) போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள்.
இங்கு அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை/ஆற்றுப்படுத்துதல் என்கிறோம்.
சரி விஷயத்துக்கு வருவோம்… கவுன்சலிங் என்பது பேச்சு வைத்தியம் என்று சொன்னேன்… அதில் அப்படி என்னதான் செய்ய வேண்டும்…

வேற என்ன செய்யப் போறிங்க… பேசத்தான் வேணும்!!!….
அடப்போய்யா… அதுக்கேதுக்கு கூட்டிட்டு வரணும்… அதான் வீட்லயே நாங்க நிறையா அட்வைஸ் பண்ணிட்டோமே என்று சொல்லும் முன் பொறுங்கள்…
அட்வைஸ் என்பது வேறு… கவுன்சலிங் வேறு…
நம்மை அணுகுபவர்களுக்காக முடிவுகளை நாம் எடுக்காமல் அவர்கள் எடுக்க உதவி செய்வதே கவுன்சலிங்… முடிவை நாம் எடுத்தால் அது அட்வைஸ்…
உதாரணமாக… ஒரு குடிகாரரிடம் “தோ.. பாரு… ஏற்கனவே குடிச்சு குடிச்சு குடல், கல்லீரல் மாதிரி வயித்துகுள்ள இருக்கிற எல்லா பார்ட்ஸ்ம் பாதிச்சுருச்சு… இனியும் குடிச்சா செத்துத்தான் போகணும்… ஒழுங்கா இப்போவே நிறுத்திடு….” என்றால் அது அட்வைஸ்…. மாறாக அவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கி எது அவனை குடிக்க பிடிக்க தூண்டுகிறதுதென்று என்பதை கண்டுபிடித்து அதை அவன் உணருமாறு செய்து அந்த பழக்கத்தை கைவிட்டால் கிடைக்கும் நன்மைகளை புரிய வைத்து அதன் பின்னும் முடிவெடுக்கும் பொறுப்பை அவனுக்கே விட்டால் அது கவுன்சலிங்….
இப்போ சொல்லுங்க ,.. உங்க நண்பரும் , உறவினரும் இப்படி இருக்க முடியுமா?
ஆமென்று தலையாட்டுவீர்கள் என்று சொன்னால் ,, அட ஆமாங்க.. அதுலயும் சிக்கல் இருக்கு..
ஏன் ஒரு நண்பரிடமோ/நலன்விரும்பியிடமோ ஆலோசனை செய்யக்கூடாதா?
நண்பர்களும், நலன்விரும்பிகளும் உங்கள் வாழ்க்கையின் முக்கிய நபர்கள். அவர்களுடன் பேசுவது உங்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், வாழ்வை மேம்படுத்தவும் உதவ முடியும், எனினும் அதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவர்களால் உங்கள் பிரச்சனைகளை நடுநிலையுடன் பார்க்க முடியாமல் போகலாம். உங்களை வெகு காலமாக அவர்களுக்கு தெரியும் என்பதால், நீங்கள் ‘இப்படிப்பட்டவர்தான்’ என்பது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். ஆகவே அவர்களின் சொந்தக்கருத்துக்களை, அனுபவங்களை உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வாக சொல்ல வாய்ப்பு அதிகம்.
இதைப்பார் நண்பா, நான் சொல்றபடி செஞ்சா தப்பிக்கலாம் இல்லனா பிரச்சினை பெரிதாகத்தான் ஆகும்
நம்ம மாப்பிள்ளைக்கு கூட இதையேதான் சொன்னேன், சரியாயிடுச்சு.. நீயும் செய் என்பது போன்ற அட்வைஸ் அலப்பறைகளில் போய் முடியும்.
உளவியல் ஆலோசகரை எடுத்துக்கொண்டீர்களானால், உங்களையும் உங்கள் பிரச்சனைகளையும் உளவியல் ரீதியான, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அடிப்படையாய் வைத்து நடுநிலைமயுடன் உங்களுக்கு உதவுவார்.

ஓகோ அப்படியா?… அதுசரி, யாரெல்லாம் உளவியல் ஆலோசகர் அல்லது யாரெல்லாம் கவுன்சிலிங்க் தரலாம் ? அதற்கானத் தகுதிகள் என்ன ? அடுத்தப் பதிவில்
-சகாயா

No comments:
Post a Comment