Sunday, 29 March 2015

பதிவு 5 - மனம் - முன்னுரை

Mind 5
புரிதலும் புரிதல் நிமித்தமும்


வணக்கம்!
என்ன மனம் வரிசையின் ஐந்தாவது பதிவில் முன்னுரையா?? என்னய்யா சொல்ற??  .. ஆமாம் காரணமாய்தான் ...

மனநலம் பற்றி ஏதோ ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். நாமதான் உளவியல் முதுகலை முடித்துவிட்டோமே( திறந்தநிலை கல்வி) என்கிற தைரியத்தில் கூட இருக்கலாம் ..ஆனால் அதன் பின் எப்படி? எதை?! சொல்லுவது என்று மிகவும் குழம்பிப் போய் பேசாமல் மூன்று பதிவுடன் எஸ்கேப் ஆகிவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நீண்ட இடைவெளிக்குப்பின் தான் பதிவுகள் போட முடிகிறது. அதனால் காண்டாகி என்னை கடுப்பாக பார்க்க ஆரம்பித்தனர் நண்பர்கள் ..

தளம் : http://littlemoregrowth.blogspot.in/ 

வேலை ஒரு காரணமாய் இருந்தாலும்.. நானும் உங்களோடு படித்துக் கொண்டேதான் எழுதுகிறேன். அட நெஜமாங்க.(.முதுகலை- கலந்தாய்வு மற்றும் மனநல சிகிச்சை ) அதுவும் ஒரு காரணம்  


இன்னொரு விஷயம் .. இவன் சொல்வதை நம்பலாமா? இல்லையா என்று யோசிக்கிறிங்களா மக்களே.. சொல்வதெல்லாம் உண்மை ... இந்த சரக்கெல்லாம் என் பாடப் புத்தகத்திலிருந்தோ, இல்லை ஆங்கிலத்திலிருந்தோ, அதையும் தாண்டி தமிழ்ல முன்னாடி எழுதிட்டு இருக்கிறங்ககிட்ட இருந்தும் எடுத்த விஷயங்கள்.. சொந்த வார்த்தைகளில் கொஞ்சம் பதிக்கிறேன், அவ்வளவுதான் . ஸோ , நோ காப்பிரைட் பிரச்சினை . 110 % சொந்த சரக்கு இல்லை . 

இதெல்லாம் எதற்கு? தமிழில் இவைகளை எழுத வேண்டும் என்கிற ஒரு பேராசை .. அது சரி அதற்கான அவசியம் என்ன?. இன்று எல்லா பத்திரிக்கையிலும் சினிமாவிலும் மனநோய்கள் அதிகம் பேசப்படுக்கின்றன, சித்தரிக்கப்படுக்கின்றன. செய்திததாள், பன்பலை( FM), தொலைக்காட்சி இணையம் உள்ளிட்ட எல்லா வகை மீடியாக்களும் உளவியல் ஆலோசனை என்கிற பெயரில் கால் பக்கத்தையோ, பொதிகையில் செய்திப் போடுகிற நேரத்தில் தங்கள் சேனலில்/பன்பலையில் பஞ்சாயத்து பண்ணியோ டி ஆர் பி ரேட்டிங்கையும் விற்பனையும் பெருக்கிக் கொள்கின்றன.. 

ஆனால் வெகு சிலரே அதை பற்றி முழுமையாக ஆராய்ந்து எழுதுகின்றனர்/ பேசுகின்றனர். பல சமயம் வழங்கப்படும் செய்திகள் அரைக்குறையாகவும் சில சமயம் உளறல்களாகவும் உள்ளது நிதர்சன உண்மை, அதேபோன்று மனநலம் பற்றிய செய்திகளில் முக்கால்வாசி கலவியல் பற்றியோ அல்லது சுய முன்னேற்றம் பற்றியோ உள்ளன.

நம் மனதைப் பற்றியோ, அது இயங்குகிற விதத்தைப் பற்றியோ சொல்லித் தருவதற்கு மீடியாவும் இல்லை .. மீடியமும் இல்லை . நம்மையும் நம்மைச் சார்ந்து இருப்பவர்களையும் பற்றிய புரிதலைக் கொடுக்கும் மன நலவியல் கல்வி என்பது உண்மை ..மனம் சார்ந்த குறைபாடுகள், நோய்கள், ரொம்ப ஆச்சரியமானவை. ஆரவமானவை .. வித்தியாசமானவையும் கூட..  . 

சரியான  விளக்கங்கள் தெரியாததாலும் புரியாததாலும் பலர் தேவை இல்லாத சிகிச்சைகளை மேற்கொண்டு அநாவசியமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஸோ .. ஒரு உளவியல் மாணவனாய் நமது தினசரி மனம் சார்ந்த பிரச்சினைகளை புரிந்துக்கொள்ள உதவும்.சில அடிப்படை உளவியல் விஷயங்களை என் தளங்களில் பகிர முயற்சிக்கிறேன்.. அவ்வளவே அவ்வளவுதான்.. 

ஆகவே நீங்கள் எதற்காக இந்த பக்கங்களை படித்தாலும் சரி,படிக்காவிட்டாலும் சரி .. உங்களாலான உதவியாய் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.(Share Button ஒவ்வொரு பதிவின் கீழும் இருக்கின்றது.) உங்கள் நேரத்துக்கு நன்றி. வாருங்கள். வாழ்த்துகள்


No comments:

Post a Comment