Sunday, 11 February 2018

மன அழுத்தம் - Stress 1

Mind 7
புரிதலும் புரிதல் நிமித்தமும்
வணக்கம்! 
ஒரு நாள் மாலை வெளியில் நமக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்தது நான்! அந்தப்பக்கம் ஒரு பெண் . 6 மாத காலமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருப்பதாக கூறினார் ஜெனி. ஒரு பெரிய டி நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.  ‘என்ன காரணம்என கேட்டபோது, ‘இதுதான்என அவரால் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி, பணம், ஆரோக்கியம், வேலை, குடும்பம், திருமணம் என ஒன்றன் பின் மற்றொன்றாக அவரை கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.

நடுக்கம், தலைவலி, எரிச்சல், ஜீரணக் கோளாறு, கோபம்  போன்றவை அடிக்கடி ஏற்படுவதால், நிறைய விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தப்பட்டார். எந்த நேரமும் எதையேனும் நினைத்துக் கவலையடைவதாகவும் கூறினார். அலுவலகத்தில் யாரேனும் சாதாரணமாகக் கோபப்பட்டால் கூட, அதையே நினைத்து பல மணி நேரம் வருத்தப்படுவதாகவும் இதனால் தன் வேலை பறிபோய் விடுமோ என பதற்றமாவதாகவும் சொன்னார். தான் முன்பை விட வலிமை குறைந்தவளாகி விட்டேனா என்று ஒவ்வொரு முறையும் கேட்டு கொண்டே இருந்தாள்

எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகவும்ஏதோ ஆபத்து நேர்ந்து விடுமோஎன மனம் படபடப்பாக உள்ளதாகவும் பயந்தபடியே கூறினார். இவை காரணமற்ற கவலைகள் என உணர்ந்தாலும், கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிக் கொண்டே கலங்கஆரம்பித்தார். ஜெனி பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து, எந்த உடல்நல பிரச்னையும் இல்லை என அறிந்த பிறகே, என்னிடம் வந்தார். சில உளவியல் பரிசோதனைக்கு பின்னர், அவருக்கு ஏற்பட்டது மன அழுத்தப் பிரச்சினைகள் என்பது தெரிய வந்ததுஅதற்கு பிறகு நிறைய ஆலோசைனைகளும் , கொஞ்சம் தெரப்பியும் தேவைப்பட்டது அவளுக்கு .

இங்கே நிறுத்துவோம் .

மன அழுத்தம் என்றால் என்ன ?


மன அழுத்தம் (Stress) என்பது " நம்மிடத்தில்  உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும் ".  எளிமையாக நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம்.

ஐந்து வயசு குழந்தையில்  இருந்து அறுபது வயது  இளைஞர் வரைக்கும் இது இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கும் வியாபித்திருக்கிற மாய மனிதன் இவன்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக தேடினால் .. ஒரு பிளாஷ்பேக் கிடைக்கிறது நமக்கு .. அது ஒரு ஆய்வு மையம் , எண்டோகிறினாலொஜிஸ்ட் மருத்துவர் ஒருவர் ( endocrinologist ) ஒரு ஆய்வு செய்து கொண்டு இருந்தார், எல்லா ஆய்வாளர்கள் போலவும் இவரும் ஒரு எலியை பிடித்து அதற்கு வித விதமான இரிடேஷன் தரக்கூடிய மருந்துகளை கொடுத்துப்பார்த்தார் . அந்த எலி எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரி ரியாக்ஷன்  கொடுத்ததை பார்த்த உடனே அவருக்கு ஒரு சந்தோசம். நாம் ஒரு புது ஹார்மோனை கண்டுபிடித்து விட்டோம் நமக்குத்தான் நோபல் பரிசு  என்று  வானத்தில் மிதந்து கொண்டே இருக்கும் போதே , இது ஹார்மோன் இல்லை இதற்கு  பெயர்  ஸ்ட்ரெஸ் என்று கண்டுபிடித்தார்

அந்த நல்ல மனிதரின் பெயர் ஹேன்ஸ் செலே( Hans Selye ). அவர் பெயர் வைத்த நேரம்  ஒரு ஐம்பது  வருஷத்துக்கு பிறகு அந்த ஸ்ட்ரெஸ் ( மன அழுத்தம் ) உலகையே ஆட்டிப்படைக்கிறது .

சரி, மன அழுத்தம் இருக்கும் போது உண்மையில் நமது உடலில் என்ன தான் நடக்கிறது?

ஆதிகாலத்தில், மனிதன் காட்டில் நடமாடும் போது, ஒரு புலி அவன் முன் திடீரெனத் தோன்றினால், அவன் அதனை எதிர்த்து 'போரிட வேண்டும்' (Fight) அல்லது ஓட வேண்டும் (Flight ). ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மை தயார் நிலையில் வைப்பதற்காக உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.



ஒரு மன அழுத்தம் உணரப்படும் அல்லது புரிந்து கொள்ளப்படும் போது, மன அழுத்தம் பதில் அமைப்பு (  stress response system ) வேலை செய்யத் தொடங்குகிறது. இதன் விளைவாக, மன அழுத்த  ஹார்மோன்கள் (இயக்குநீர்  ) அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஆகியவற்றை உடல் விடுவிக்கிறது.
இந்த ஹார்மோன்கள் தங்கள் வேலைகளை செய்வதற்கு ஒரு வேலையாளை உடல் முழுவதும் வைத்திருக்கிறது . அதற்கு பெயர் ரெசெப்ட்டர்ஸ். கார்டிசோழும் ரெசிப்ட்டர்ஸும் இணைந்து செய்ய வேண்டிய வேலையை இல்லை, இல்லையில்லை சொல்ல வேண்டிய வேலையை மற்ற செல்களிடம் சொல்லிவிடும். இப்படி சொல்லும்போது அந்த ஸ்ட்ரெஸ் சிஸ்டம் தடைபடும் போது ரெசெப்ட்டர்ஸ் தன வேலையை செய்யாமல் அப்படியே நிறுத்தி விடும். இப்படி தடை செய்யப்படும் போது நமது உடல் ஏதிவினைகள் ஆற்ற முடியாமல் போகிறது .
புரிந்து கொள்ள ,

மன அழுத்தத்துக்கான மேலே சொல்லப்பட்ட விளக்கத்தை இன்னொரு முறை படியுங்கள் புரியும் .

குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது.ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம்.

இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress - "positive stress") மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress - "negative stress"). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன
ஜப்பானில் இதற்கு Karoshi என்று கூட பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் நேரடி மொழிபெயர்ப்புஅதிக வேலைப்பளு மரணம்..

மன அழுத்தம் உருவாக்குவதற்கு ஒரு ஹார்மோன்  இருக்கிறது என்றால், அதைக் குறைப்பதற்கும் ஒரு இயக்குநீர் இருக்கத் தானே வேண்டும்! அது வேறு ஒன்றுமே இல்லை, காதல், அன்பு, சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கும் காரணமாக இருக்கும் Oxytocin எனும் இயக்குநீர் தான். ஆகவே, மன அழுத்தம் உள்ள நேரம் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

மன அழுத்தம் உருவாவதற்கான காரணங்கள், கையாள வேண்டிய முறைகளை பார்ப்போம் அடுத்தப் பதிவில்.. !

 





1 comment:

  1. Thank you so much for your valuable information.It is very useful for to recover from stress.

    ReplyDelete