Wednesday, 1 January 2014

புது வாழ்வு -புது வாழ்த்து

அனுதினமும் ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
ஆக பெரியதாய் ஏமாற்றமடைந்தது போதும்,
இலட்சியங்களால் நிரப்புவோம் மனதை.
அன்பை விளக்கேற்றி ஆவலாய்  விநியோகிப்போம் 

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதங்களும் கடந்து
365 நாளும் முழுகிப்போன -புளித்த
பழைய வருடக்  கதை மீண்டும் வேண்டாம்
நாட்களை சுதந்தரிப்போம்!. நமது பெயர்  எழுதுவோம் !!  

இனியும் பழைய துன்பங்கள் வேண்டாம்!
அணியும் புதுப்  புன்னகையே போதும்!! 

அம்மா, அப்பா,சொந்தங்கள்,மேலாளர்,
கடன்காரன், காதலர்,நண்பர்கள், நாய்க்குட்டி
எதிரி, எதிர்காலம் ,அடையாளங்கள் ,ஏமாற்றங்கள்
பேஸ்புக், டிவிட்டர், சொல்லக்கூடாத இன்னபிற ... 
இவர்களுக்காக  வாழும் உங்கள் வாழ்க்கையில்
உங்களுக்காகவும்  கொஞ்சூண்டு இடம் ஒதுக்குங்கள்.

இன்றைக்காவது 'வாழுவதைப் போல வாழுவதை'
விட்டு விட்டு நம் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம்!


 வாழ்த்துகள்

1 comment: