Tuesday, 14 January 2014

குற்ற பத்திரிக்கை

குற்றப்  பத்திரிக்கை  வாசிப்பது
குதூகலத்தைத்  தருகிறது எப்போதும்
படைத்தவனிடம் விடை கேட்பது
பலமடங்கு மகிழ்ச்சித்  தருகிறது. 

கடவுள் பேசிக்கொண்டிருந்த 
கடந்தக் காலங்களில் ஒருநாள் 
“இறைவா ,
படைப்பின் உச்சமென்றாய் என்னை
படைத்தது எல்லாம் எனக்கேயென்றாய்
கேட்பதற்கு நன்றாய் இருந்தது- கதைதானே  
கேட்டும் வைத்தேன் மகிழ்வோடு - ஆனால் 
கேள்வி ஒன்று  துளைக்கிறது இன்று. 
சிறப்புகள் பல பெற்ற எங்களால் 
பறக்க முடியவில்லையே ?
சிட்டுக் குருவி என்னைப்பார்த்து
சிரித்துவிட்டு போகிறது அய்யா”
கேட்டு வைத்தேன் இந்த கேள்வியை
பதில் பேச முடியுமா அவரால்?

வழக்கம் போல சிரித்த கடவுள்
பழக்கமில்லாத பதில் தர ஆரம்பித்தார்

“மகனே
நன்றாக பேசுகிறாய் -சிலசமயம்
நல்லதையும் பேசு- பலரால் முடியாதது அது
இறகுகளால்  ஆனதல்ல உன் சிறகுகள்
இதயத்தால் ஆனது. -
சுவர் கொண்டு அடைக்கப்பட்டிருந்தாலும்
மடை திறப்பது போல பொழியும் நாக்கு
ஒரு சிறகல்லவா?
நினைத்த மாத்திரத்தில்
நினையாத தூரம் செல்லும்
நினைவலைகளுக்கு நான் தராத சிறகா?
பகைமை களைந்து பகுத்தறிகிற போது
நீ உச்சமாகிறாய்- படைப்பபுக்கெல்லாம்

விழுந்தாலும் தடுமாறி எழுந்திருக்கும்
இலட்சிய வேட்கை தோன்றும்
நல்மனம் இருக்கும் நீ உயர்வல்லவா? 


அழகு வாய் திறந்து பழகு மொழி பேசினார் கடவுள்

சிரித்து வைத்தேன் சிந்திக்க முடியாமல்.

No comments:

Post a Comment