புரிதலும் புரிதல் நிமித்தமும் 2
நடு ரோட்டில் ஒருத்தர் அடிப்பட்டு விழுந்துக்கிடக்கிறபோது அவரைச் சுற்றி ஒரு கும்பல் பார்த்துக் கொண்டே இருக்குமே எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?
இது ஏன் என கடைசியில் தெரிந்துகொள்வீர்கள்
‘அவர்க்கு ஈகோ அதிகம்’
‘இவர் ஈகோயிஸ்ட்’
‘என்னோட ஈகோ இடம் கொடுக்க வில்லை’
இப்படியாக நாம் அடிக்கடிப் பேசுவோம் இல்லையா? அப்படி என்றால் ஈகோ என்பது என்ன..?
மனித மனம், மூன்று இணைந்து செயல்படும் உறுப்புகளாக இருக்கிறது என்று ஃப்ராயட் சொல்வார். அதாவது,
- ஈட்- ID (லேசான “ஏட்” என்ற உச்சரிப்பும் இருக்கிறது)
- ஈகோ -Ego
- சூப்பர் ஈகோ- Super Ego
ஈட்- ID
ஈட் என்பது நமது உடல் தேவைகளைக் குறிக்கும். பசி, தாகம், பாலுணர்ச்சி போன்ற உள்ளுணர்வுகள் மனிதனுக்குள் மிருகங்களைப் போலவே இருக்கின்றன.
ஒரு மிருகம் எவ்வாறு தன் பசி, தாகம், பாலுணர்ச்சி ஆகியவையை உடனே திருப்திப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறதோ அதே போல மனித மனதிற்குள் ஈட் விரும்புகிறது.
மிக சின்ன வயதில் ஒரு மனித குழந்தையும் பசி, தாகம், தூக்கம் ஆகிய தேவைகள் உடனே திருப்திப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் பெற்றோர்கள மற்றும் குடுமபத்திலுள்ள உள்ள மற்ற உறுப்பினர்கள் அக்குழந்தைக்கு சுயக்கட்டுப்பாடு பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள்
குழந்தை பெற்றோர்களுக்கு பிடிக்காத ஒரு செயல் செய்யும்போது “வேண்டாம்! வேண்டாம்!” என்று பெற்றோர்கள் சொல்ல, குழந்தையும் அதே மாதிரி ஒரு செயல் செய்யும்போது தன்னையே ஞாபகப்படுத்துவதுபோல் “வேண்டாம்! வேண்டாம்!” என்று சில சமயம் சொல்வதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம்
சூப்பர் ஈகோ- Super Ego
நீங்களும் நானும் இருக்கிற இந்த நல்ல உலகத்தில் வாழ்வதற்கு சில பல நெறிமுறைகள் வேண்டும். இப்படிப்பட்ட ‘செய், செய்யாதே’ விதிகளை நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தரும்போது அது மனதில் பதிவாகிறது
நெறிமுறைகள் பதிந்திருக்கும் மனதின் இந்த பாகத்தை ஃப்ராயட் ஸுப்பர் ஈகோ என்ற பெயர் சூட்டுகிறார்.
ஈகோ- Ego
ஆகவே, ஈட் ஒருபுறம் உடனடியாக ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று விரும்பும்போதுஸுப்பர் ஈகோ ஆசைகளை நெறிமுறைகளை பின்பற்றித்தான் நிறைவேற்ற வேண்டும் என்று உத்திரவிடுகிறது.அதாவது ஈட் டின் தேவைகளும் (ஆசைகளை உடனே பூர்த்தி செய்!) ஸுப்பர் ஈகோவின் தேவைகளும் (நெறிமுறைகள் அனுமதிக்கும்வரை காத்திரு!) முரண்படுகின்றன. இந்த முரண்பாட்டை சமாளித்து எது செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது ஈகோ.
பிராய்டின் கருத்துப்படி மனிதன் கருத்தரிக்கும் போதே ஈகோவும் தரித்து விடுகின்றது. இந்த ஈகோ வளர்ச்சியே மனம் என்றாகிறது. இதன் அடிப்படை பணிகள் இரண்டு.
- புலனுணர்வு,
- அறிவுத் திறன்.
இந்த உணர்வும் அறிவும் சேர்ந்துதான் மனித மனத்தை ஓர் ஒழுங்கு அமைவுக்கு ஆழ்த்துகின்றன. மனம் ஒழுங்குக்கு வர வர வாழ்க்கை ஒழுங்காகிறது.
நாம் ஒரு கடைக்குப் போகிறோம். ஐஸ்கிரீம் பார்த்து அதை உடனே சாப்பிட ஈடுக்கு ஆசை வருகிறது. ஸுப்பர் ஈகோ “வேண்டாம்! அது உன்னுடையது அல்ல. சமுதாய நெதிமுறைகளின்படி நீ இன்னொருவருக்கு சொந்தமான பொருளை உபயோகிக்கக் கூடாது” என்று தடுக்கிறது.
இரண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஈகோ ஒரு நடுநிலை பாதையை கண்டுபிடிக்கிறது, அதாவது வீட்டுக்குச் சென்று காசு கொண்டுவந்து ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுவது.இவ்வாறு ஈகோ எப்பொழுதும் ஈட்-யின் “உடனடி-திருப்தி” என்ற வற்புறுத்தலையும் ஸுப்பர் ஈகோவின் “சமுதாய நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆசை-பூர்த்தி கூடாது” என்ற வற்புறுத்தலையும் திருப்திபடுத்த ஒரு வழி தேடுகிறது.
சில உதாரணங்கள் ஈட்-ஸுப்பர் ஈகோ – ஈகோ ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டை புரிந்துகொள்ள உதவும்:
உதாரணம் 1:
ஈட்: எனக்கு அந்த பெண்ணுடன் உறவு வேண்டும்
ஸுப்பர் ஈகோ: கூடாது. அவள் உன் மனைவி அல்ல/ உனக்கு சொந்தம் அல்ல
ஈகோவின் முடிவு: நான் நன்றாக உழைத்து ஒரு நல்ல பதவிக்கு வருவேன். அப்பொழுது அந்த பெண்ணைக் கல்யாணம் செய்து உறவு கொள்வேன்.
ஈட்: எனக்கு அந்த பெண்ணுடன் உறவு வேண்டும்
ஸுப்பர் ஈகோ: கூடாது. அவள் உன் மனைவி அல்ல/ உனக்கு சொந்தம் அல்ல
ஈகோவின் முடிவு: நான் நன்றாக உழைத்து ஒரு நல்ல பதவிக்கு வருவேன். அப்பொழுது அந்த பெண்ணைக் கல்யாணம் செய்து உறவு கொள்வேன்.
இவ்வாறு, ஈகோ இரண்டையும் திருப்திப்படுத்த ஒரு நடுநிலை பாதை கண்டுபிடிக்கிறது.
உதாரணம் 2:
ஈட்: எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே, எனக்கு உடனே நிறைய பணம் கொடு.
ஸுப்பர் ஈகோ: பணம் உடனேக் கிடைக்காது, இன்னொருவரின் பணத்தை அபகரிப்பது சமுதாய நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்படி செய்யாதே!
ஈகோவின் முடிவு: நான் உழைத்து சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணம் சம்பாதிப்பேன்.
ஈட்: எனக்கு நிறைய பணம் வேண்டும். ஆகவே, எனக்கு உடனே நிறைய பணம் கொடு.
ஸுப்பர் ஈகோ: பணம் உடனேக் கிடைக்காது, இன்னொருவரின் பணத்தை அபகரிப்பது சமுதாய நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்படி செய்யாதே!
ஈகோவின் முடிவு: நான் உழைத்து சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணம் சம்பாதிப்பேன்.
இன்னொரு உதாரணம்
ஈட்: எனக்கு இந்த இடத்தில் மரியாதை/முக்கியத்துவம் வேண்டும்!
சூப்பர் ஈகோ: வேலை/சாதனை செய்தவர்களுக்கே மரியாதை, இன்னொருவரின் புகழ்/ மரியாதையை அபகரிப்பது சமுதாய நெறிமுறைகளுக்கு எதிரானது. அப்படி செய்யாதே
ஈகோ: இப்போது அமைதியாக இரு உனது நேரம் வரும்போது உனக்கானதை அடைவாய் !
இந்த உதாரணங்களில் நமக்கு மிக பொறுத்தமான ஒரு அம்சத்தைப் பார்க்கிறோம். அதாவது, சமுதாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஈகோவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது நாம் அந்த பூர்த்தியை தள்ளி வைக்க வேண்டி வருகிறது. இதை உளவியலாளர்கள் postponement of gratification அதாவது திருப்தி-தள்ளி- வைப்பு என்று வர்ணிக்கிறார்கள். ( அடுத்த படிவுக்கு முன்னோட்டம் J )
இது இப்படியிருக்க ஈகோ பிடித்தவன் என்று சொல் வழங்கக் காரணமென்ன..? இதற்கு உளவியல் கூறும் விளக்கம் என்ன?
உளவியலில் ஈகோ(ego) எனும் சொல்லை நல்ல பொருளில் தான் கையாளப் படுகின்றது. மனத்தின் நனவு நிலையாக(conscious) உளவியல் கொள்கிறது. உடல் சார் புலனுணர்வு அது தொடர்பான புலனறிவு அதன் நீட்சியாக அறிவுத்திறன் ஆகிய தொகுதிதான் ஈகோ.
மாறாக, ஈகோயிசம் (egoism) எனும் வேறொரு சொல்லை அது சுட்டுவதுண்டு. இதற்கு ஒரே பொருள் சுயநலம். தன்னைப் பற்றியே சிந்திபோரே ஈகோயிஸ்ட் ஆவார். அதோடன்றி, வரட்டுக் கௌரவம், தலைக் கணம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்கள் ஈகோயிசத்தில் அடங்கும்.இந்த எதிர்மறை குணங்களை சுட்டுகின்ற ஒரு தமிழ் சொல் – திமிர்
இவர்களிடம் அமைதியாகவும் மரியாதையாகவும் சகிப்புத்தன்மையோடும் இருங்கள். அவர்களுக்கு எதிராக நாம் செயல் பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டி விடும். பிறகு தவறான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். காலமும் புரிதலும் நல்ல உளவியல் ஆலோசனைகளும் நம்மை விட நன்றாகவே அவர்களுக்கு உதவும்.
ஆக ஈகோ நல்லது.. அதுசரி .. இனிமேல் யாரையாவது ஈகோ பிடித்தவர் எனத் திட்டுவீர்கள் ??!! 
Bystander Effect : (பைஸ்டெண்டர் எபெக்ட்)
சில நாட்களுக்கு முன் ஒரு வணிக வளாகத்தில் ஒரு தற்கொலை. ஒரு இளைஞர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். விழுந்த அந்த இளைஞரை போலீஸ் உட்பட யாரும் நெருங்கவில்லை – கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத்திற்கு… அதன் பின் யாரோ சிலர் முயன்று ஆட்டோ வைத்து அவரை கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். இதைதான் பைஸ்டெண்டர் எபெக்ட் என்பார்கள். கூட்டமாக ஒரு தவறைப் பார்க்கிறப் போது மனிதர்களின் தயக்கமான மனோபாவம் அவர்களை ஸ்தம்பிக்க வைக்கிறது. தனியாளாக இருக்கும்பொது உதவி செய்வார்கள் இவர்கள். ஆச்சரியமாக இல்லை ?
It is a social psychological phenomenon that refers to cases in which individuals do not offer anymeans of help to a victim when other people are present. The probability of help is inversely related to the number of bystanders – Wikipedia









